பல்லடம்; பல்லடம் பொங்காளியம்மன் கோவிலில், கந்த சஷ்டி கவசம் பாராயணம் நடந்தது. மதுரையில், ஹிந்து முன்னணி சார்பில், முருகன் மாநாடு சமீபத்தில் நடந்தது. இதன் வெற்றியை கொண்டாடும் விதமாகவும், மாநாட்டில் எடுக்கப்பட்ட உறுதிமொழியின்படியும், பல்லடம் பொங்காளியம்மன் கோவிலில் கந்த சஷ்டி கவசம் பாராயணம் நடந்தது. ஹிந்து முன்னணி மாவட்டச் செயலாளர் சர்வேஸ்வரன் தலைமை வகித்தார். மாநில நிர்வாக குழு உறுப்பினர் செந்தில், ஹிந்து அன்னையர் முன்னணி திருப்பூர் மாநகர் மாவட்ட பொது செயலாளர் நிர்மலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாலை, 6.00 மணிக்கு கந்த சஷ்டி கவசம் பாராயணம் நடந்தது. இதனையடுத்து, மூலவர் பொங்காளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் பொங்காளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் ஹிந்து முன்னணி சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் சஷ்டி தினத்தில் இதேபோன்று கந்தசஷ்டி பாராயணம் செய்யப்படும் என, ஹிந்து முன்னணி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.