திருச்செந்தூர் கும்பாபிஷேகம்; அடிப்படை வசதிகள் தயார்.. புனித நீர் தெளிக்க ட்ரோன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூலை 2025 05:07
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது என இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடமுழுக்கு ஜூலை 7ஆம் தேதி நடக்கிறது. இதையொட்டி நேற்று சண்முகர் விமானத்தில் தங்கத் தகடுகள் பதிக்கப்பட்ட கலசம் பொருத்தப்பட்டது. 7ம் தேதி அதிகாலை வரை யாகசாலை பூஜைகள் நடைபெறும். அன்று காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் ராஜகோபுர விமான கலசங்கள், சுவாமி மூலவர், சண்முகர், ஜெயந்திநாதர், நடராஜர், குமரவிடங்கபெருமான் மற்றும் பரிவார மூர்த்திகள் விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடாக கடற்கரையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது என இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
புனித நீர் தெளிக்க ட்ரோன்; திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகத்தை, கடற்கரை மற்றும் கோயில் வளாகத்தில் நின்று தரிசிக்கும் பக்தர்கள் மீது ட்ரோன்களை பயன்படுத்தி புனித நீரை தெளிக்கும் ஒத்திகை இன்று நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் திருச்செந்தூரில் முகாமிட்டு கோவில் வளாகம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.