குன்றத்துார் கந்தழீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூலை 2025 09:07
குன்றத்துார்; குன்றத்துார் கந்தழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
குன்றத்துார் முருகன் கோவில் மலை அடிவாரத்தில், பழமை வாய்ந்த கந்தழீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தனர். தொடர்ந்து, உபயதாரர்கள் நிதி, 2.04 கோடி ரூபாய் மதிப்பில், கோவில் புனரமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கும்பாபிஷேக விழா, கடந்த 1ம் தேதி கிராம தேவதை வழிபாடுடன் துவங்கியது. நான்கு கால யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு, இன்று காலை வேத மந்திரம் முழுங்க மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.