வல்லக்கோட்டை முருகன் கோயிலில் 17 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூலை 2025 09:07
காஞ்சிபுரம்; வல்லக்கோட்டை முருகன் கோயிலில், சுமார் 17 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம், வல்லக்கோட்டையில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில், அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்றதாகும். பகீரதன், இந்திரன், துர்வாசமுனிவர், அருணகிரிநாதசுவாமிகள் ஆகியோர் இக்கோயிலுக்கு வந்து வழிபட்டுள்ளனர். இக்கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பணிகள் தொடங்கப்பட்டன. திருப்பணிகள் நிறைவு பெற்றதையடுத்து இன்று 7ம் தேதி காலை 9 மணிக்குமேல் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோயில் பின்புறம் யாகசாலை 49 யாக குண்டத்துடன் கூடிய யாகசாலை பூஜைகள் சிற்பபாக நடைபெற்று வந்தது. கணபதி பூஜையுடன் பூர்வாங்க பூஜைகள் தொடங்கிய விழாவில் இன்று 17 ஆண்டுகளுக்கு பிறகு கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.