ஆனி அனுஷம்; காஞ்சி மகா பெரியவருக்கு சிறப்பு அபிஷேகம் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூலை 2025 10:07
கோவை; வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். கார்டனில் அமைந்துள்ள மகா சங்கரா மினி ஹாலில் மாதந்தோறும் அனுஷம் நட்சத்திரத்தில் காஞ்சி மகா பெரியவருக்கு சிறப்பு பூஜை நடைபெறும். அதன்படி இன்று ஆனி அனுஷத்தை முன்னிட்டு மகா பெரியவரின் விக்கிரகத்திற்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடைபெற்றது. இதில் .சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் மகா பெரியவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காஞ்சி பெரியவரை தரிசனம் செய்தனர்.