திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆனி தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூலை 2025 10:07
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவில் 519வது ஆண்டு ஆனி தேரோட்டம் இன்று விமரிசையாக நடைபெற்றது.
திருநெல்வேலி காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா ஜூன்.,30ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் தொடக்கமாக அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து விழா நாட்களில் காலை, மாலையில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து வழிபட்டனர்.