வரதராஜ பெருமாள் கோயிலில் வேதாந்த தேசிகர் உற்சவர் பிரதிஷ்டை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூலை 2025 10:07
பரமக்குடி; பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வேதாந்த தேசிகர் உற்சவர் பிரதிஷ்டை அபிஷேகம் நடந்தது.
எமனேஸ்வரம் சவுராஷ்டிர சபைக்கு பாத்தியமான பெருந்தேவி வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு புதிய வேதாந்த தேசிகர் பிரதிஷ்டை நிகழ்ச்சி நடந்தது. ஜூன் 6 மாலை 6:00 மணிக்கு அனுக்கையுடன் விழா தொடங்கியது. இரவு உற்சவர் கண் திறப்பு நடந்தது. நேற்று காலை 6:00 மணி தொடங்கி வேத மந்திரங்கள் முழங்க ஹோமம் மகாபூர்ணாகுதி நடந்தது. தொடர்ந்து 9:30 மணிக்கு வேதாந்த தேசிகருக்கு மகா அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் அலங்காரம், தீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. சபை நிர்வாகிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.