புதுச்சேரி; கருவடிக்குப்பத்தில் சந்திரமதி உடனுறை அரிச்சந்திர சாமி கோவிலில், 85 ஆண்டுக்கு பிறகு நடந்த, மகா கும்பாபிேஷகம் விழாவில், ஏராளமானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர். பல ஆண்டுகளுக்கு முன் சித்தர்கள் பலர் தவம் செய்தனர். அப்பகுதியில் உள்ள சுடுகாடு அருகில் வரலாற்று சிறப்பு வாய்ந்த அரிச்சந்திர மகாராஜா கோவில் உள்ளது. இக்கோவிலில், கடந்த 1800ம் ஆண்டு முதல் முறையாக கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பிறகு, 1940ம் ஆண்டு, இரண்டாம் முறையாக கும்பாபிஷேகம் நடந்துள்ளது. இந்நிலையில், 85 ஆண்டுகளுக்கு பிறகு, கோவிலில் உள்ள வசிஷ்ட மகரிஷி, விஸ்வாமித்ரா மகரிஷி, மகாகால ருத்ர பைரவர், சந்திரமதி உடனுறை அரிச்சந்திர சாமிகளுக்கு, நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை சிவாச்சாரியார்கள் உட்பட ஏளாளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை, சந்திரமதி அரிச்சந்திர சாமி அறக்கட்டளை மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.