திருப்பரங்குன்றம் கோயிலில் பரிவார தெய்வங்களுக்கு யாக சாலை அமைக்கும் பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூலை 2025 04:07
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் கும்பாபிஷேகத்திற்காக பரிவார தெய்வங்களுக்கு 17 யாகசாலை அமைக்கும் பணி நடக்கிறது. ஜூலை 10ல் யாகசாலை பூஜைகள் துவங்குகின்றன. அதற்காக கோயில் வளாகத்தில் வள்ளி தேவசேனா மண்டபங்கள் எதிரே யாகசாலை அமைக்கப்பட்டு 75 யாக குண்டங்களும், 40 வேதிகைகளும் அமைக்கப்பட்டுள்ளன. அப்பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. தற்போது கோயில் சஷ்டி மண்டபத்தில் பரிவார தெய்வங்களுக்கு 17 யாகசாலை அமைக்கும் பணி நடக்கிறது.