பழநி முருகன் கோயிலில் அனனாபிஷேகம்; பாரவேல் மண்டபத்தில் 108 சங்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூலை 2025 05:07
பழநி; பழநி, முருகன் கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு பாரவேல் மண்டபத்தில் 108 சங்கு பூஜை, யாக பூஜை நடைபெற்றது. பழநி முருகன் கோயிலில் இன்று ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தை முன்னிட்டு பாரவேல் மண்டபத்தில் 108 சங்குகள் வைத்து, தங்கச் சப்பரத்தில் கும்ப கலசங்களுக்கு யாக பூஜை நடைபெற்றது. யாக பூஜையில் வைக்கப்பட்ட கலச நீர்,சங்கு நீர் ஆகியவை உச்சி கால பூஜையில் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. சித்தநாதன் அண்ட் சன்ஸ் பழனிவேல், ராகவன், கார்த்திகேயன் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.