அச்சிறுபாக்கம்; அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட முருங்கை ஊராட்சியில் தண்டு மாரியம்மன், கங்கை அம்மன் கோவில் கூழ்வார்த்தல் விழா, நேற்று விமரிசையாக நடந்தது. தண்டு மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு காப்பு அணிவித்தல் நிகழ்ச்சி கடந்த 7ம் தேதி துவங்கி, விழா பந்தக்கால் நடப்பட்டது. முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம், காத்தவராயன் சுவாமி ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை 11:00 மணியளவில், அம்மனுக்கு சொர்ண அபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தன. மதியம் 1:00 மணியளவில், அம்மன் வீதி உலா நடந்தது. பின், மாலை 5:00 மணிக்கு கங்கை அம்மன், தண்டு மாரியம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. இரவு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் விநாயகர், தண்டு மாரியம்மன், முத்தாலம்மன் வீதி உலா நடந்தது.