திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேக தினத்தன்று பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் குறித்து அமைச்சர் மூர்த்தி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரவீன்குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன், அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் நிர்வாகம் பழனி, அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, அறங்காவலர் சண்முகசுந்தரம், துணை கமிஷனர் சூரிய நாராயணன், அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர். குடிநீர், மருத்துவ வசதிகள், ஆம்புலன்ஸ் வசதி, சுகாதார வசதிகள், கார் பார்க்கிங், மின்விளக்குகள், கோயில் கோபுரத்திற்கு கீழ் டாக்டர் தலைமையில் மருத்துவக் குழுவினர், ட்ரோன் மூலம் புனித நீர் தெளித்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.