பழநி; பழநி கோயில் சார்பில் மாரியம்மன் கோயிலில் ஹிந்து அறநிலை துறை சார்பில் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 108 குத்துவிளக்கு பூஜை துவங்கியது.
பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் கீழ் செயல்பட்டு வரும் கிழக்கு ரத வீதி மாரியம்மன் கோயிலில் ஹிந்து சமய அறநிலைத்துறை சார்பில் பவுர்ணமி அன்று 108 குத்துவிளக்கு பூஜை நடைபெற திட்டமிடப்பட்டது. ஹிந்து சமய அறநிலைத்துறை சட்டமன்ற மானிய கோரிக்கையின் போது 20 பிரசித்தி பெற்ற அம்மன் கோயிலில் பவுர்ணமி அன்று குத்து விளக்கு பூஜை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று மாலை கோயில்களில் குத்து விளக்கு பூஜை துவங்கி வைக்கப்பட்டது. அதில் ஒரு பகுதியாக பழநி மாரியம்மன் கோயிலில் நேற்று பவுர்ணமி தினத்தை முன்னிட்டு மாலை 108 குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் கணபதி பாடல், விளக்கு பூஜை ஆகியவை நடைபெற்றது. நிகழ்ச்சிகள் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, துணை கமிஷனர் வெங்கடேஷ், உதவி கமிஷனர் லட்சுமி நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி துவங்கி வைத்தனர். இதில் நகரின் முக்கிய பிரமுகர்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.