புதுச்சேரி; புதுச்சேரி மகா சமுத்திர ஆரத்தி சேவா சங்கம் மற்றும் அண்ணாமலையர் கல்வி அறக்கட்டளை சார்பில், ஆனி மாதம் சிறப்பு மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி கடற்கரை சாலையில் நடந்தது. இதையொட்டி, நேற்று மாலை 5:00 மணிக்கு பக்தர்கள் கடற்கரையில் கூடுதல், மாதா, பிதா, குரு ஆசி வேண்டுதல், குல தேவதை, இஷ்டம் தேவதை, கிராம தேவதை வேண்டுதல் நடந்தது. தொடர்ந்து 5:30 மணிக்கு மணக்குள விநாயகர் கோவிலில் அடியார்கள் வேண்டுதல் பூஜை நடந்தது. அண்ணையர் தீபம் ஏற்றுதல், இரவு 7:00 மணிக்கு ஏழு சப்த கன்னிகள் பூஜை செய்து கோவிலில் இருந்து வரும் அடியார்களுக்கு எதிர் சேவை செய்தல், 27 சுமங்கலிகள் அகல் தீபம் ஏற்றுதல், சமுத்திர அபிஷேகம் தொடர்ந்து, மகா சமுத்திர ஆர்த்தி குழு சங்கல்ப பூஜை செய்து மகா ஆரத்தி காட்டும் நிகழ்சி நடந்தது. திரளான பொதுமக்கள கலந்து கொண்டனர்.