ஸ்ரீவி., திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூலை 2025 08:07
விருதுநகர்; தென்திருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் இன்று ( ஜூலை 14) சிறப்பாக நடக்கிறது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயில் நடந்த கும்பாபிஷேகத்தில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. ஜூலை 12 காலை முதல் யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் துவங்கியது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தது. இன்று ஜூலை 14 காலை 5:30 மணிக்கு மேல் 6:30 மணிக்குள் சீனிவாச பெருமாள் விமானம், பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராமராஜா தலைமையில் அறநிலைத்துறையினர், கோயில் பட்டர்கள் செய்திருந்தனர்.