எல்லாம் அப்பன் முருகனுக்காக.. குன்றத்தில் விடிய விடிய காத்திருந்து தரிசித்த பக்தர்கள்..!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூலை 2025 08:07
மதுரை; முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 14 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. பக்தர்கள் விடிய விடிய காத்திருந்து தரிசனம் செய்தனர்.
இன்று (ஜூலை 14) அதிகாலை 3:00 மணிக்கு மங்கள இசை முடிந்து, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசமாகி அதிகாலை 3:45 மணிக்கு 8ம் கால யாகசாலை பூஜை பூர்த்தி செய்யப்பட்டது. தீபாராதனை முடிந்து அதிகாலை 4:30 மணிக்கு யாகசாலையில் வைத்து பூஜித்த புனித நீர் அடங்கிய தங்க, வெள்ளிக் குடங்கள் யாகசாலையில் இருந்து கோபுரங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டன. ராஜகோபுரம், வல்லப கணபதி விமானம், கோவர்த்தனாம்பிகை அம்பாள் விமான கலசங்களில் புனித நீரால் கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது. கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பரங்குன்றத்தில் குவிந்தனர். கும்பாபிஷேகத்தின் போது வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, வீர வேல் முருகனுக்கு அரோகரா என்ற பக்தர்களின் கோஷம் விண்ணைப் பிளந்தது. நேற்று இரவு முதல் விடிய விடிய காத்திருக்கிறோம் எல்லாம் அப்பன் முருகனுக்காக என பக்தர்கள் பரவசத்துடன் தெரிவித்தனர்.