கவுமாரியம்மன் கோயில் திருவிழா; அக்னிசட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூலை 2025 04:07
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் விடிய, விடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து அம்மனை தரிசனம் செய்தனர்.
பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்டது. பக்தர்களுக்கு சகல ஐஸ்வர்யம் வழங்கும் ஆயிரம் கண்ணுடையாளாக வராகநதி கரையோரம் வீற்றிருக்கிறார்.ஆனித் திருவிழா ஜூலை 7 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மன் சிம்மம், ரிஷபம், குதிரை, யானை, அன்னப்பட்சி, புஷ்பம் பல்லக்கில் வீதி உலா வந்தார். பத்து நாட்கள் நடந்த திருவிழாவில் நேற்று தமிழகத்தில் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசிக்கவந்தனர். முக்கிய திருவிழாவான இன்று அதிகாலை 3:00 மணியிலிருந்து ஏராளமான பக்தர்கள் நாக்கில், ஆயிரக்கணக்கானோர் அக்னிசட்டி, ஆயிரம் கண் பானை, மாவிளக்கு எடுத்து அம்மனை வழிபட்டனர். ஜூலை 22ல் மறுபூஜை நடக்கிறது. டி.எஸ்.பி., நல்லு தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில்ஈடுபட்டிருந்தனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் சுந்தரி, மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர்.