விக்ஞான கிரி மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிக் கிருத்திகை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூலை 2025 10:07
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான விக்ஞான கிரி மலை மீது வீற்றிருக்கும் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிக் கிருத்திகை விழா சிறப்பாக நடைபெற்றது. நேற்று அதிகாலை முதலே விக்ஞான கிரி மலைக்கு பூ காலடிகளை சுமந்து நீண்ட வரிசையில் நின்று வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்தனர். முன்னதாக சிவன் கோயில் அதிகாரிகள் விக்ஞான கிரி மலையை கண்கவரும் வகையில் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சிவன் கோயில் செயல் அலுவலர் பாபி ரெட்டி தலைமையில் கடந்த மூன்று நாட்களாக கோயிலில் விக்ஞான கிரி மலை மீது பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்ததோடு சிறப்பாக உள்ளதா என்று உறுதி செய்ய பல முறை ஆய்வு செய்தனர்.
பக்தர்கள் எந்த வித இடையூறும் இன்றி சாமி தரிசனம் செய்வதோடு தொடர்ந்து சிவன் கோயில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப் பட்டது. முன்னதாக நேற்று ஆடிக்கிருத்திகை விழாயையொட்டி காளஹஸ்தி சிவன் கோயில் வளாகத்தில் வீற்றிருக்கும் வள்ளி தெய்வானை சமேத செங்கல்வராய சுவாமி வெள்ளி இந்திர விமான வாகனத்தில் ஸ்ரீ காளஹஸ்தி நகரின் நான்கு மாட வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதே போல் விக்ஞான கிரி மலை மீது வீற்றிருக்கும் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிக் கிருத்திகை விழாயை யொட்டி அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து பக்தர்கள் ஸ்ரீ காளஹஸ்தி நகரிலிருந்து மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூ காவடிகள் சுமந்து கொண்டு விக்ஞானகிரி மலை ஏறி சாமி தரிசனம் செய்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் கோயில் அருகில் உள்ள நாரதர் புஷ்கரணியில் முடி காணிக்கை செலுத்தி புனித நீராடி முருகனை வணங்கி தங்களின் நேர்த்திக் கடனை செலுத்தினர். நாரதர் குளத்தில் பக்தர்களுக்கு எந்த வித இடையூறும் வராமல் சிவன் கோயில் செயல் அலுவலர் பாபி ரெட்டி, அதிகாரிகளுக்கு தகுந்த வழி நெறிமுறைகளை வழங்கினார். சாமி தரிசனம் செய்த அதிகாரிகள் சுமார் ஐம்பது ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய காவடிகளை ஏந்தி வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தியதாக தெரிவித்தனர்.