விருத்தாசலத்தில் நாம சங்கீர்த்தன பக்த ஜன சபா சார்பில் சீதா கல்யாண மகோத்சவம் கடந்த 18ம் தேதி காலை விக்னேஸ்வர பூஜையுடன் நிகழ்ச்சி துவங்கியது. முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் காலை விட்டல்தாஸ் மகராஜ், கிருஷ்ணதாசின் சீதா கல்யாண உற்சவம் துவங்கியது. வேத மந்திரங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க சீதா கல்யாணம் விமர்சையாக நடந்தது. பாகவதர்கள் பாலாஜி, ஹரிபாஸ்கர் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். மாலை வசந்த கேளிக்கை, ஆஞ்சநேயர் உற்சவங்கள், மங்கள ஆரத்தி நிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை பக்த ஜன சபா நிர்வாகிகள் விருத்தகிரி, பாலசுப்ரணியன், விருத்தகிரி, கணேஷ், ரமேஷ், சந்துரு, வாசு அருணாசலம், முத்துகிருஷ் ணன் செய்திருந்தனர்.