ஆடி முதல் செவ்வாய்; கோவை கோவில்களில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூலை 2025 12:07
கோவை; கோவை சிந்தாநல்லூர் பஸ் ஸ்டாண்ட் அருகே அமைந்துள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் ஆடி மாதம் முதல் செவ்வாய்கிழமையை முன்னிட்டு பாலமுருகனுக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் விபூதி காப்புஅலங்காரத்துடன் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமன பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆடி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை சாய்பாபா காலனி கே. கே. புதூர் தெரு எண் - 9 ல் அமைந்துள்ள காளியம்மன் கோவிலில் மூலவர் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. இதன் ஒரு பகுதியாக லட்சுமி பூஜை நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் மூலவர் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காளியம்மனை வழிபட்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.