ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர திருவிழா; தங்க நாற்காலியில் ஆண்டாள் உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூலை 2025 10:07
விருதுநகர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆடிப்பூரத் திருவிழா மூன்றாம் நாள் இரவு வீதியுலாவில் தங்க நாற்காலியில் ஆண்டாள், அனுமன் வாகனத்தில் ரெங்கமன்னார் அருள் பாலித்தனர்.
ஸ்ரீவில்லிபுத்துாரில் அமைந்துள்ள ஆண்டாள் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் பிரச்சித்தி பெற்றதாகும். இக்கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா மிகவம் பிரபலமானது. ஜூலை 20 முதல் 28 வரை நடக்கிறது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஜூலை 28ல் நடக்கிறது. விழா மூன்றாம் நாள் இரவு வீதியுலாவில் தங்க நாற்காலியில் ஆண்டாள், அனுமன் வாகனத்தில் ரெங்கமன்னார் அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆண்டாள் கோயில் தேராட்டத்தை முன்னிட்டு ஜூலை 28ல் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிப்பதாக கலெக்டர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார். இதை ஈடு செய்ய ஆக. 2வது சனிக்கிழமை பணி நாள் ஆகும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.