மூங்கில்துறைப்பட்டு ஆதி முத்துமாரியம்மனுக்கு தீமிதி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூலை 2025 10:07
மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள பொருவளூர் நரிக்குறவர் காலணியில் உள்ள ஆதி முத்துமாரியம்மனுக்கு தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் தீ மிதித்து சாமியை வழிபட்டனர்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த பொருவளூர் நரிக்குறவர் காலனியில் உள்ள அதி முத்து மாரியம்மனுக்கு ஆடி மாதம் முதல் செவ்வாய் அன்று சாகை வார்த்தால் மற்றும் தீமிதி திருவிழா நடப்பது வழக்கம்.அதேபோல் இவ்வாண்டும் கடந்த வெள்ளிக்கிழமை அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.அதன் பின் தினமும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றன.நேற்று முன்தினம் அம்மனுக்கு பால்குட ஊர்வலமும் நேற்று மதியம் சாகை வார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு ஆதி முத்து மாரியம்மனுக்கு திரளான பக்தர்கள் தீமிதித்து சாமியை வழிபட்டனர். மூங்கில்துறைப்பட்டு சுற்றியுள்ள பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். அதேபோல் மூங்கில்துறைப்பட்டு காமராஜர் நகரில் உள்ள மாரியம்மனுக்கு சாலை நிகழ்ச்சியும் இரவு அம்மன் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றன.