ஆடி அமாவாசை தர்ப்பணம்; காரைக்குடி பகுதியில் குவிந்த மக்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூலை 2025 03:07
காரைக்குடி; காரைக்குடி பகுதியில், ஆடி அமாவாசை முன்னிட்டு, ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். ஆண்டுதோறும் வரக்கூடிய 3 அமாவாசைகளில் முக்கியமான அமாவாசையாக ஆடி அமாவாசை கருதப்படுகிறது. இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் நின்று தர்ப்பணம் கொடுத்தனர். கோவிலூரில் உள்ள கொற்றவாளீஸ்வரர் கோயில் தெப்பத்தில் ஆயிரக்கணக்கானோர், பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். மேலும், காரைக்குடி நகரச் சிவன் கோயில் செக்காலை சிவன் கோயில் பகுதியில் உள்ள குளங்களில் ஏராளமானோர் தர்ப்பணம் செய்தனர்.