திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சரவணப்பொய்கையில் அஸ்தர தேவருக்கு தீர்த்த உற்ஸவம் நடந்தது. கோயிலில் இருந்து பல்லக்கில் அஸ்தரதேவர் சரவணப்பொய்கை கொண்டு செல்லப்பட்டு, ஆறுமுக நயினார் சுவாமி சன்னதி முன்பு யாகம் வளர்த்து, பூஜை நடந்தது. பின்பு சரவணப் பொய்கை தண்ணீரில் அஸ்தர தேவருக்கு பால், மஞ்சள் பொடி, திரவியப்பொடி உள்பட 16 வகை அபிஷேகம் முடிந்து தீர்த்த உற்ஸவம் நடத்தப்பட்டது.
* மலைக்கு பின்புறம் உள்ள பால் சுனை கண்ட சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் முடிந்து சுந்தர மகாலிங்கம் அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
* ஹார்விபட்டி ஜோதி லிங்கேஸ்வரர் கோயிலில் அபிஷேகம் முடிந்து மூலவருக்கு சிறப்பு அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.