ஆடி அமாவாசை; புதுச்சேரி கடற்கரையில் சுவாமிகள் தீர்த்தவாரி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூலை 2025 03:07
புதுச்சேரி; புதுச்சேரியில் ஆடி அமாவாசையை முன்னிட்டு நகர பகுதியிலிருந்து கோயிலின் பல்வேறு சுவாமிகள் கடற்கரையில் தீர்த்தவாரியில் கலந்து கொண்டன.
புதுச்சேரி கடற்கரையில் நடந்த ஆடி அமாவாசை தீர்த்தவாரியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆண்டுதோறும், தை மற்றும் ஆடி மாதத்தில் வரும் அமாவாசை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அன்றைய தினம் கோவில்களிலும், நீர் நிலைகளிலும் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி இன்று புதுச்சேரி கடற்கரையில் சுவாமிகளுக்கு தீர்த்தவாரி நடந்தது. சுப்ரமணியர் மணக்குள விநாயகர், கவுசிக பாலசுப்ரமணியர், வரதராஜ பெருமாள் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள், சிறப்பு அலங்காரத்துடன் புதுச்சேரி கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டனர். தொடர்ந்து கடலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.