ஸ்ரீரங்கம் ஜீயர் சேதுக்கரை கடலில் புனித நீராடி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூலை 2025 11:07
திருப்புல்லாணி; ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீ வராக மகா தேசிகன் ஜீயர் ராமநாதபுரம் மாவட்டம் சேதுக்கரையில் புனித நீராடினார்.
திருப்புல்லாணியில் வைணவ மடங்களில் பழமையான ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம் அமைந்துள்ளது. ஜூலை 5ல் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தின் ஸ்ரீ வராக மகா தேசிகன் ஜீயர் சுவாமிகள் வருகை தந்தார். ஆனி பவுர்ணமி முதல் ஆவணி பவுர்ணமி வரை 60 நாட்கள் ஹிந்து மத துறவியர்கள் ஒரே ஊரில் தங்கியிருந்து ஜெபங்கள், நாம வேள்வி, பாராயணம் உள்ளிட்டவைகளை செய்கின்றனர். சாதுர் மாஸ்ய சங்கல்பம் எனப்படும் பூஜை ஜூலை 10ல் துவங்கி செப்., 7 வரை நடக்கிறது. இதனை முன்னிட்டு 60 நாட்களும் திருப்புல்லாணியில் தங்கி இருந்து ஜீயர் விரதம் மேற்கொண்டு வருகிறார். கடந்த ஜூலை 10ல் சாதுர் மாஸ்ய சங்கல்பம் பூஜையைடுத்து நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு சேதுக்கரை கடலில் புனித நீராடினார். ஜீயருடன் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சீடர்கள் பங்கேற்று பூஜையில் ஈடுபட்டனர். மதியம் அவர் மடத்திற்கு திரும்பினார்.