ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் திருப்பதி வேங்கடேஸ்வர சுவாமி நேற்று முன்தினம், புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டி சங்கமித்ரா கன்வென்சன் சென்டரில் எழுந்தருளினார். அவருக்கு, புதுச்சேரி வேதபாரதி சார்பில் பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்து, மண்டபத்தில் அருள் பாலித்தார். தொடர்ந்து, திருவாராதனம், தோமாலை மற்றும் தீபாராதனை நடந்தது. நேற்று காலை 8:30 மணி முதல் பகல் 12:30 மணிவரை சுப்ரபாதம், வாசுதேவ புண்ணயாகவாசனம், பூதசுத்தி முதலான கிரியைகள், நித்திய திருவாராதனம், அபிேஷக சங்கல்பம், அபிேஷக கலச ஸ்தாபனம், சிறப்பு திருமஞ்சனம், நீராட்டம், தோமாலை, திவ்ய பிரபந்த சேவா காலம், அர்ச்சனை நடந்தது. பின் முதல்கால பூஜை, வேத திவ்ய பிரபந்த ஆகம சாற்றுமுறை, தீபாராதனை, சிறப்பு புஷ்பயாகம், இரண்டாம் கால பூஜை, மகா மங்கள ஹாரத்தி, மகா ஆசீர்வாதம் நடந்தது. பூஜைகள் அனைத்தும், திருமலை திருப்பதி தேவஸ்தான சிறப்பு அதிகாரி ஆனந்த தீர்த்தாச்சார்யா பகடல் தலைமையில் நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை வேதபாரதி தமிழ்நாடு செயலாளர் வெங்கட்ராமன், புதுச்சேரி தலைவர் பட்டாபிராமன், பஜனோத்ஸவ கமிட்டி தலைவர் சிவசங்கர் எம்.எல்.ஏ., மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.