திருவாலங்காடு பத்ரகாளியம்மன் கோவில் உற்சவம்; பால்குடம் எடுத்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூலை 2025 02:07
திருவாலங்காடு; பத்ரகாளியம்மன் கோவிலில் காளி உற்சவத்தை ஒட்டி, பக்தர்கள் இன்று பால்குடம் எடுத்து வந்தனர். திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவிலுடன் இணைந்தது, திருவாலங்காடு பத்ரகாளியம்மன் கோவில். இக்கோவிலில் பிரசித்தி பெற்ற ஆடி மாதம் ஒன்பதாம் நாள் நடைபெறும் காளி உற்சவம் இன்று துவங்கியது. முதல் நாளான இன்று காலை 11:00 மணிக்கு, வடாரண்யேஸ்வரர் சன்னிதியில் இருந்து பால்குடம் எடுத்து வந்த பெண்கள், 11:30 மணிக்கு பத்ரகாளியம்மன் சன்னிதியை வந்தனர். பின், மூலவருக்கு பாலாபிஷேகம் செய்தனர். மாலை 6:00 மணிக்கு காட்டுகாளி வழிபாடு நடந்தது. தொடர்ந்து, எட்டு நாட்கள் உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். வரும் 6ம் தேதி காலை 6:00 மணிக்கு சும்பன், நிசும்பன் படுகளத்துடன் விழா நிறைவு பெறும். விழாவிற்கான ஏற்பாட்டை, திருத்தணி முருகன் கோவில் இணை ஆணையர் ரமணி தலைமையிலான ஊழியர்கள் செய்து வருகின்றனர்.