Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொன்மலை வேலாயுத சுவாமி கோவிலில் ... திருவாலங்காடு பத்ரகாளியம்மன் கோவில் உற்சவம்; பால்குடம் எடுத்த பக்தர்கள் திருவாலங்காடு பத்ரகாளியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஒரே சிலையில் 3 யுகங்களின் ஹனுமன்..!
எழுத்தின் அளவு:
ஒரே சிலையில் 3 யுகங்களின் ஹனுமன்..!

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2025
01:07

மூன்று யுகங்களின் அவதாரமாக ஒரே கல்லில் தோன்றிய ஹனுமனை பார்க்க வேண்டுமெனில், நீங்கள் மாண்டியா மாவட்டம் மத்துாரில் சிம்சா நதிக்கரை அருகில் உள்ள ஹொலே ஆஞ்சநேய சுவாமி கோவிலுக்கு செல்ல வேண்டும்.


ஸ்தல புராணம் அடங்கிய பனை ஓலையை, தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தனர். அதில், மத்துார் அர்ஜுனபுரி என்றும், கதம்ப ஷேத்திரம் என்றும் குறிப்பிட்டுள்ளது. இங்குள்ள உக்ரநரசிம்ம கோவிலில் இரண்டு கல்வெட்டுகள் உள்ளன. ஒன்று, கி.பி., 1150 என தேதியிட்டு உள்ளது. வெளிப்புற நுழை வாயிலில் உள்ள மற்றொரு கல்வெட்டு, 10ம் நுாற்றாண்டை சேர்ந்தது. கல்வெட்டுகளில் மத்துார், மருதுார் என்றும், நரசிம்ம சதுர்வேதி மங்கலம் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் மூலம் மத்துார் என்ற பெயர் மரதுார் அல்லது மத்துாரம்மா என்ற பெயரில் இருந்து தோன்றியிருக்கலாம் என்று கருதுகின்றனர்.


அமைதியான, பசுமையான சூழலில் அமைந்து உள்ள இக்கோவிலில், 600 ஆண்டுகளுக்கு முன், தற்போதைய ஸ்ரீ ஆஞ்சநேயர் சிலை, ஸ்ரீபாதராஜர், ஸ்ரீ வியாசராஜர் ஆகியோரால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. விஜயநகர பேரரசரின் வம்சாவளி ஆட்சியில், 732 ஆஞ்சநேயர் சிலைகளை பிரதிஷ்டை செய்த ஸ்ரீ வியாசதீதரின் வழிகாட்டுதலின் கீழ் இக்கோவில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இச்சிலை 6 முதல் 7 அடி உயரம் கொண்டதாகும். இங்குள்ள ஆஞ்சநேயர் ஜாக்ருதவஸ்தம் எனும் கண்கள் விழித்திருக்கும் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. மற்றொரு சிறப்பு, திரேத யுகத்தில் பகவான் ஸ்ரீராமரின் சேவகராக ஹனுமனாகவும்; துவார யுகத்தில் ஸ்ரீகிருஷ்ணரின் சேவகராக பீமராகவும்; கலியுகத்தில் ஸ்ரீமத்வாச்சாரியாராகவும் இருந்ததை அடையாளப்படுத்தும் வகையில் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.


இப்பகுதியினர் கூறுகையில், ‘கடந்த 10 – 12 ஆண்டுகளில், ஆஞ்சநேயரின் முகம் அரை அங்குலம் அளவு அதிகரித்துள்ளது. 2004 ஸ்ரீராம நவமியின்போது, இரவு நேரத்தில் கோவில் கதவுகள் மூடப்பட்ட பின், மணிகள், சங்கு, மேளம் சத்தம் கேட்டன. அதுபோன்று 2011ல் சந்திர கிரகணத்தின் போதும், மூடப்பட்ட கோவிலுக்குள் இருந்து அதேபோன்று சத்தம் கேட்டன’ என்றனர். காணிக்கையுடன் ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் சேர்ந்து, கோவிலை ஐந்து செவ்வாய்க்கிழமை தோறும், ஐந்து முறை அங்கபிரதட்சணம் செய்தால், உங்கள் விருப்பம் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது. திருமணம், நீதிமன்ற வழக்குகள், வேலைகள், குழந்தை பாக்கியம் போன்ற கடுமையான தடைகள் இருந்தாலும், இங்கு வந்து வேண்டியவர்கள் பலனடைந்து உள்ளனர். 


எப்படி செல்வது?; பெங்களூரில் இருந்து ரயிலில் செல்வோர், மத்துார் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலுக்கு நடந்தோ, ஆட்டோவிலோ செல்லலாம். பஸ்சில் செல்வோர் மத்துார் பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 1.5 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலுக்கு செல்லலாம்.


சிறப்பு நாள்: ஷிராவண மாதம், ஏப்ரலில் ஆஞ்நேயர் ஜெயந்தி, சைத்ர மாதம், ராமநவமி.


நேரம்: காலை 7:30 முதல் மதியம் 1:00 மணி வரை மற்றும் மாலை 4:30 முதல் இரவு 7:00 மணி வரை.


தொடர்புக்கு: 99166 00184. – நமது நிருபர் –

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை, கூடலழகர் கோவிலில் புரட்டாசி பௌர்ணமியை  முன்னிட்டு பாலாபிஷேக கட்டளை சார்பாக ... மேலும்
 
temple news
உஜ்ஜைன்; மத்தியப் பிரதேசம், உஜ்ஜைனி மகாகாளேஸ்வரர் கோயிலில் ஷரத் பூர்ணிமாவை முன்னிட்டு கீர் வைத்து, ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தி ஸ்ரீ ராம் ஜென்மபூமி மந்திரில் இன்று வால்மீகி ஜெயந்தி விழா சிறப்பாக ... மேலும்
 
temple news
கேரளா, பாலக்காடு, கல்பாத்தியில் பிரசித்தி பெற்ற விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோயில் தேர்த் திருவிழா நவ., 07 ... மேலும்
 
temple news
சுசீந்திரம்: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் நடைபெற்ற நவராத்திரி விழாவிற்கு சென்றிருந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar