திருமலையில் ஸ்ரீ ஆண்டாள் திருவாடிப்பூரம் சாத்துமுறை கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூலை 2025 03:07
திருப்பதி; ஆடிப்பூரத்தை முன்னிட்டு திருமலையில் ஆண்டாள் நாச்சியாருக்கு தேவஸ்தானம் சாா்பில் சாத்துமுறை நடத்தப்பட்டது.
ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூர நாளில் நாச்சியாருக்கு திருப்பதி தேவஸ்தானம் சாா்பில் திருமலையில் சாத்துமுறை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஏழுமலையானுக்கு காலையில் அணிவித்த சேஷ வஸ்திரம், சடாரி, பூஜைப் பொருட்கள், சாத்துமுறை பிரசாதங்கள் உள்ளிட்டவற்றுடன் அா்ச்சகா்கள் புரசைவாரித் தோட்டத்துக்குச் சென்று அங்குள்ள அனந்தாழ்வாா் பிருந்தாவனத்தில் அவற்றை சமா்ப்பித்து, ஸ்ரீ ஷதாரி அர்ச்சனை செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமி ஊர்வலமாக கோயில் வீதிகள் வழியாக ஸ்ரீவாரி கோயிலுக்கு திரும்பினர். நிகழ்ச்சியில் பேஷ்கர் ராம கிருஷ்ணா, பரு பட்டேதார் ஹிமந்த கிரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்