ஞான ஈஸ்வரர் கோவிலில் வாராகி அம்மனுக்கு பஞ்சமி சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூலை 2025 03:07
கோவை; கோவை சாய்பாபா காலனி கே. கே. புதூர் சின்னம்மாள் வீதியில் அமைந்துள்ள ஞான ஈஸ்வரர் கோவிலில் ஆடி மாத வளர்பிறை பஞ்சமி தினத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் இருக்கும் வாராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இதில் பச்சை நிற புடடு உடுத்தி சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் வாராகி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.