செஞ்சி; மாரியம்மன் கோவிலில் பூ பல்லக்கு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். செஞ்சி, கிருஷ்ணாபுரம், மாரியம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி, மலர் தொடு வியாபாரிகள் சார்பில், 37 ஆம் ஆண்டு பூப்பல்லக்கு விழா நடந்தது. இதை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு சத்திரத்தெரு, அங்காளம்மன் கோவிலில் இருந்து 108 பெண்கள் பால்குடம் ஊர்வலமாக எடுத்து வந்து மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். மேலும் பக்தர்கள் தீச்சட்டி எடுத்தனர். மாலை 6:00 மணிக்கு மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. இரவு 11:00 மணிக்கு வான வேடிக்கையுடன் மாரியம்மனுக்கு பூப்பல்லக்கு ஊர்வலம் நடந்தது.