கள்ளக்குறிச்சி வாராஹி அம்மன் கோவிலில் கருட பஞ்சமி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூலை 2025 02:07
கள்ளக்குறிச்சி; கருட பஞ்சமியை முன்னிட்டு கள்ளக்குறிச்சி, மாடூர் டோல்கேட் அருகில் பஞ்சமுக மஞ்சள் வாராஹி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நேற்று நடந்தது. விழாவையொட்டி, நேற்று காலை மூலவருக்கு மஞ்சள், தேங்காய், இளநீர், பால், எலுமிச்சை, தயிர், மஞ்சள், குங்குமம் என 10 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள அம்மிக்கல்லில் ஏராளமான பக்தர்கள் பச்சை விராலி மஞ்சள் அரைத்து ஜல வாராஹி அம்மனுக்கு சார்த்தி நேர்த்தி கடன் செலுத்தினர்.