திருவடானை; திருவாடானையில் சிநேகவல்லி அம்மன் உடனுறை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர விழாவையொட்டி சுவாமி அம்மன் திருக்கல்யாணம் நடந்தது.
ராமநாதபுரம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான இக்கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா ஜூலை 19 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக ஜூலை 27 ல் தேரோட்டம் நடந்தது. இன்று திருக்கல்யாண விழா நடந்தது. முன்னதாக ஆதிரெத்தினேஸ்வரர், பிரியாவிடை, சிநேகவல்லி அம்மன் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு திருமண கோலத்தில் காட்சியளித்தனர். சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடந்தது. செயல் அலுவலர் பாண்டியன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் நடந்தது. இன்று ஊஞ்சல் உற்ஸவமும், நாளை சுந்தரர் கைலாச காட்சியும் நடைபெறும்.