கோவை; கோவை சின்னவேடம்பட்டியில் உள்ள கவுமார மடாலயத்தில், நாண்மங்கல விழா நேற்று நடந்தது. காலை 6:00 மணி முதல் கோடி அர்ச்சனை நிறைவு, புனித நீர் அபிஷேகம், கொலு வழிபாடு நடந்தது. தொடர்ந்து நாண்மங்கல விழா மலர் வெளியீடு நடந்தது. நிகழ்ச்சியில், கவுமார மடாலய சிரவையாதினம் குமரகுருப சுவாமிகள் பேசுகையில், "கவுமார மடாலயத்தில் 2028ம் ஆண்டில் 66 அடி உயர வேல் கோட்டம் நிறைவு பெற உள்ளது. ஒரு கோடி மந்திரங்கள் எழுதி இதில் வைக்கப்படும். 2026ம் ஆண்டில் இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடக்க உள்ளது. இதற்கான மரம், கேரள மாநிலத்திலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளது,” என்றார். விழாவை தொடர்ந்து, தண்டபாணி கடவுள் கோவி லில் சுவாமிக்கு 3,000 கிலோ எடையுள்ள மலர்களால், சிறப்பு அபிஷேக வழிபாடு, சண்முகார்ச்சனை, அன்னம் பாலிப்பு நடந்தது. விழாவில், பேரூர் மருதாசல அடிகள், பழனி சாதுசண்முக அடிகள், செஞ்சேரிமலை முத்து சிவராம அடிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.