Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news பக்தர்கள் தங்கும் வாலாஜாபாத் ... திருப்பதி தரிசனம்; இனி தினமும் டிக்கெட்டு கிடைக்கும்..! திருப்பதி தரிசனம்; இனி தினமும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாரிபுத்துார் செல்லியம்மன் கோவில் ஆடி தேரோட்டம் விமரிசை
எழுத்தின் அளவு:
மாரிபுத்துார் செல்லியம்மன் கோவில் ஆடி தேரோட்டம் விமரிசை

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2025
11:07

சித்தாமூர்; மாரிபுத்துார் செல்லி அம்மன் கோவில் ஆடி தேரோட்டம், நேற்று விமரிசையாக நடந்தது. மதுராந்தகம் அடுத்த மாரிபுத்துார் கிராமத்தின் ஏரிக்கரையில், பிரசித்தி பெற்ற பிடாரி செல்லியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் ஆடி மாதம் இரண்டாம் வாரம், தேர் திருவிழா விமரிசையாக நடத்தப்படும். அதன்படி, இந்தாண்டு தேர் திருவிழா, ஆடி மாதம் முதல் வாரம் செவ்வாய்க்கிழமை காப்புக் கட்டி துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம், நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில் நடந்தது. பின், நேற்று சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய செல்லியம்மன், திருத்தேரில் முக்கிய வீதிகளில் உலா வந்தார். இதில், மாரிபுத்துார் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பத்துடன் பங்கேற்று தேர் இழுத்தனர். மேலும், பக்தர்கள் மொட்டை அடித்தும், ஊரணி பொங்கல் வைத்தும், நுாற்றுக்கணக்கான சேவல் மற்றும் ஆட்டுக்கிடாக்கள் பலி கொடுத்தும், தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். தேர் திருவிழாவிற்காக, மதுராந்தகத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இன்று காலை 8:30 மணியளவில் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், மதியம் 2:00 மணியளவில் சிறப்பு அபிஷேகமும், அம்மனுக்கு ஆராதனையும் நடைபெற உள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்க சுவாமி திருக்கோவில் விழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், சக்தி விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar