உலக அமைதிக்காக ஜம்புகேஸ்வரர் கோவிலில் ஜப்பான் பக்தர்கள் சிறப்பு யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஆக 2025 02:08
திருச்சி, திருவானைக்கோயில் ஜம்புகேஸ்வரர் கோயிலில் உலக அமைதிக்காக ஜப்பானிய பக்தர்கள் சிறப்பு யாகம் நடத்தி வழிபட்டனர்.
திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோவில் பஞ்சபூத தலங்களில் நீர் (அப்பு) தலமாகவும், 60 வது தேவாரத்தலமாகவும் அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது ஞான சக்தி பீடமாகவும் உள்ள சிறப்பு பெற்றது. ஆடி மாதத்தில் அம்பாள் இங்கு சிவனை வேண்டி தவமிருந்ததாக ஐதீகம். இத்தகைய சிறப்பு மிக்க இத்தலத்தில் உலக அமைதி வேண்டி ஜப்பானிய பக்தர்கள் சிறப்பு யாகம் நடத்தி வழிபட்டனர்.
இது குறித்து ஜப்பானிய பக்தர் சயோகோ கிமுரா சாந்தி கூறுகையில், "நாங்கள் ஜப்பானில் இருந்து 120 பேர் வந்தோம், உலக அமைதிக்காக நாங்கள் பிரார்த்தனை செய்தோம். தமிழும் ஜப்பானும் எங்கள் வரலாறு மற்றும் மொழியில் வேரூன்றிய ஆழமான தொடர்பைப் பகிர்ந்து கொள்கின்றன என்று நாங்கள் நம்புகிறோம். இந்தக் கோயில்களின் கட்டிடக்கலையால் நாங்கள் மிகவும் ஈர்க்கப்பட்டோம், பாண்டிச்சேரியில் ஜப்பானிய மக்களுக்காக ஒரு புதிய ஆசிரமத்தை உருவாக்குவதே எங்கள் நோக்கம். நாங்கள் தங்கியிருந்த காலத்தில், 100க்கும் மேற்பட்ட ஆசிரமங்களுக்குச் சென்றோம், அங்கு நாங்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை பூஜை, அபிஷேகம் மற்றும் யாகம் செய்தோம் இவ்வாறு கூறினார்.