வஞ்சி அம்மனுக்கு 15 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஆக 2025 12:08
வேலூர்; வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த வஞ்சூர் கிராமத்தில் கிராம தேவதை ஸ்ரீ வஞ்சியம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆடி மாதம் மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு இன்று ஸ்ரீ வஞ்சிய அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டது. 10ரூபாய், 20 ரூபாய், 50 ரூபாய் , 100 ரூபாய் 200 ரூபாய், மற்றும் 500 ரூபாய் நோட்டுகளால் மொத்தமாக 15 லட்சம் ரூபாயில் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டுள்ளது . வஞ்சூர் மட்டுமல்லாமல் சுற்றுவட்டார கிராம பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்து சென்றனர்.