திருப்பதியில் சிரவண உபகர்மா வைபவம்; கிருஷ்ண ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஆக 2025 11:08
திருமலை; திருப்பதியில் சிராவண பவுர்ணமியை முன்னிட்டு, திருமலை கோவிலில் சிரவண உபகர்மா நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, ஸ்ரீ கிருஷ்ண சுவாமி காலை 6 மணிக்கு ஸ்ரீ பூவராகசுவாமி கோயிலுக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு, ஸ்னபன திருமஞ்சனம் செய்யப்பட்டது. இதில், அர்ச்சகர்கள் அவருக்கு பால், தயிர், தேன், தேங்காய் நீர், மஞ்சள் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்தனர். பின்னர், சுவாமிக்கு புதிய யக்ஞோபவீதம் படைக்கப்பட்டு, ஆஸ்தானம் செய்யப்பட்டது. அதன் பிறகு, ஸ்ரீ கிருஷ்ண சுவாமி ஊர்வலமாக ஸ்ரீவாரி கோயிலுக்குத் திரும்பினார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.