புதுச்சேரி; இரும்பை, பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில், ஆடிப்பவுர்ணமியை முன்னிட்டு குங்குமகாப்பு அலங்காரத்தில் அம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். புதுச்சேரி – திண்டிவனம் பைபாஸ் சாலை, இரும்பை டோல்கேட் அருகே பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆடிப்பவுர்ணமியை முன்னிட்டு குங்கும காப்பு பெருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி, காலை பாலா திரிபுரசுந்தரி அம்பாளுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. முக்கிய நிகழ்வாக, மாலை அம்பாளுக்கு குங்கும காப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தேர் உள்புறப்பாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் டிரஸ்ட் செய்திருந்தனர்.