கரூர்; கரூர், நெரூர் சுயம்பு அக்னீஸ்வரர் கோவிலில், நேற்று மாலை நாத உற்சவ பெருவிழா நடந்தது. கரூர் மாவட்டம் நெரூரில், பிரசித்தி பெற்ற சுயம்பு அக்னீஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் இசைக்கலைஞர்கள் ஒன்று சேர்ந்து இசைக்கும் நாத உற்சவ பெருவிழா நடக்கிறது. நடப்பாண்டு விழா நேற்று காலை, 8:00 மணிக்கு துவங்கியது. 8:30 மணிக்கு நாத சங்கமம், 10:30 மணிக்கு ஸ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகளின் அருளுரை, 2:00 மணிக்கு சாமவேதம் ஓதுவாரின் குழுவினரின் தேவாரப்பண்ணிசை நிகழ்வு நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, 300க்கும் மேற்பட்ட நாதஸ்வர, தவில் வித்வான்களின் நாத உற்சவ பெருவிழா நடந்தது. இதில் பல்வேறு பக்தி பாடல்கள், இசை வடிவில் வாசிக்கப்பட்டன. பின், மூலவர் அக்னீஸ்வரருக்கு மஹா தீபாராதனை காட்டப்பட்டது.