தசரா விழாவில் பங்கேற்கும் 9 யானைகளுக்கு மைசூர் அரண்மனையில் பாரம்பரிய பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஆக 2025 12:08
கர்நாடகா: மைசூர், கர்நாடகா: தசரா விழாவில் பங்கேற்கும் 9 யானைகள் மைசூர் அரண்மனையில் பாரம்பரியமாக பூஜைகள் செய்த பின்னர் வரவேற்கப்பட்டன. முழுமையாக அலங்கரிக்கப்பட்ட தசரா யானைகளைக் காண நூற்றுக்கணக்கான மக்கள் வழியெங்கும் கூடி பிரார்த்தனை செய்தனர்.
தசரா விழாவுக்கான ஏற்பாடுகள், மைசூர் அரண்மனையில், கம்பீரமான யானைகள் வரவேற்புடன் தொடங்கியது. நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலையில் ஒன்பது அலங்கரிக்கப்பட்ட யானைகளின் முதல் குழு அரண்மனை வளாகத்திற்குள் பிரமாண்டமான மற்றும் பாரம்பரிய வரவேற்புடன் அணிவகுத்துச் சென்றது. லேசான தூறல் இருந்தபோதிலும், மாலை 6:43 மணிக்கு யானைகள் ஜெயமார்த்தாண்ட வாயில் வழியாக அரண்மனையில் நுழைந்த போது மக்கள் உற்சாக மடைந்தனர். தொடர்ந்து சிறப்பு பூஜைகள், இசையுடன் வரவேற்கப்பட்டன. . வரவேற்புக்கு தலைமை தாங்கிய மைசூர் மாவட்ட பொறுப்பாளரும் தசரா நிர்வாகக் குழுத் தலைவருமான எச்.சி. மகாதேவப்பா, அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட பிற பிரமுகர்களுடன் யானைகளுக்கு மலர் தூவி வழிபட்டனர். விழாவில் துவாரபாலக பூஜை, பாத பூஜை, சங்கல்பம் மற்றும் சாமரசேவை ஆகியவை நடைபெற்றது. மங்கள ஆரத்தியுடன் விழா நிறைவடைந்தது.