சுக்கம்பாளையம் செந்தில் ஆண்டவர் கோவிலில் மண்டல பூஜை வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஆக 2025 05:08
பல்லடம்; சுக்கம்பாளையம் செல்வ விநாயகர் மற்றும் செந்தில் ஆண்டவர் கோவிலில், மண்டல பூஜை சிறப்பு வழிபாடு இன்று நடந்தது.
பல்லடத்தை அடுத்த, சுக்கம்பாளையம் ஸ்ரீசெல்வ விநாயகர், செந்தில் ஆண்டவர், ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் மற்றும் மாகாளியம்மன் கோவில் உள்ளது. கோவில் கும்பாபிஷேக விழா, ஜூலை 7 அன்று நடந்தது. இதனையடுத்து, 48 நாட்கள் மண்டல பூஜை வழிபாடு நடந்து வருகிறது. இன்று 37வது நாள் மண்டல பூஜை வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு, விநாயகர், முருகன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன. திருச்செந்தூர் செந்தில் ஆண்டவராக, முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மண்டல பூஜைகள் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.