திரியாட்டம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஆக 2025 05:08
கமுதி; கமுதி அருகே கோரைப்பள்ளம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் ஆடி பொங்கல் விழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினந்தோறும் மாரியம்மன் சிறப்பு அபிஷேகம் பூஜை நடந்தது.காப்பு கட்டிய பக்தர்கள் திரியாட்டம், அக்னிச்சட்டி,பால்குடம் எடுத்து கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.கோயில் முன்பு பூக்குழி இறங்கினர்.மூலவரான மாரியம்மனுக்கு பால்,சந்தனம்,மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம் சிறப்புபூஜை நடந்தது.சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். கிராமமக்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் கடன் செலுத்தினர். விழாவில் கமுதி அதனை சுற்றியுள்ள பலரும் கலந்து கொண்டனர்.