ஈரோடு; ஈரோட்டில், அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தின், 19வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. அகில இந்திய தலைவர் ராஜா சுவாமிநாத சிவாச்சாரியார் தலைமை தாங்கினார். நிறுவனர் கணேஷ்சிவம் முன்னிலை வகித்தார். ஹோம பூஜை, கொடியேற்றத்துடன் கூட்டம் துவங்கியது. ஆண்டறிக்கை, வரவு, செலவு அறிக்கை உள்ளிட்டவை சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. பின்னர், சங்கத்தின் தமிழக மாநில தலைவராக கீர்த்திவாச சிவாச்சாரியார், செயலாளராக சிவா ராமநாத சிவாச்சாரியார், பொருளாளராக மதன் கார்த்திகேய சிவாச்சாரியார் தேர்வு செய்யப்பட்டனர். இதேபோல் தமிழகம், புதுச்சேரி மாநில நிர்வாகிகள், செயற்குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள், மாநில அமைப்பு செயலாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் தேர்வு செய்யபட்டனர். தேர்ந்தெடுக்கபட்ட நிர்வாகிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு, உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஈரோடு மாவட்ட பொருளாளர் சரவணபவா சிவாச்சாரியார் நன்றி கூறினார்.