தின் தினி மவுனகுரு சுவாமிகளின் பிருந்தாவனத்தில் ஆடிக்கிருத்திகை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஆக 2025 08:08
கா க்ஸ்டவுன் தொட்டகுன்டேயில் 201 ஆண்டுகள் பழமையான மடம் உள்ளது. ஸ்ரீஸ்ரீஸ்ரீ தின் தினி மவுனகுரு சுவாமிகளின் பிருந்தாவனம் இங்கே அமைந்துள்ளது. இந்த மடம் பெங்களூரு மக்களிடையே பிரசித்தி பெற்றது. சித்தேஸ்வரா, சுப்பிரமணியா, கணபதி, வெங்கடேஸ்வரா சன்னிதிகளும் அமைந்துள்ளன. இங்கு வந்து தரிசிக்கும் பக்தர்கள், தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறுவதாக நம்புகின்றனர். மவு னகுரு சுவாமிகள் மடத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமிக்கு, இன்று 76ம் ஆண்டு ஆடிக்கிருத்திகை விழா நடக்கிறது. இதை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகங்கள், காவடி ஊர்வலங்கள் நடக்கின்றன. இந்த விழா, கடந்த 10ம் தேதி துவங்கியது. தினமும் இரவில் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன. முதல் நாளன்று திருப்பரங்குன்றம்; இரண்டாம் நாள் திருச்செந்துார்; மூன்றாம் நாள் பழநி; நான்காம் நாள் சுவாமிமலை, ஐந்தாம் நாளான நேற்று திருத்தணி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஆறாம் நாளான இன்று பழமுதிர்சோலை அலங்காரத்தில் அருள்பாலிப்பார். நாளை, காலை 6:00 மணிக்கு ேஹாமம் ; 7:30 மணிக்கு காவடி மற்றும் உத்சவமூர்த்தி அபிேஷகம்; 9:00 மணிக்கு காவடி ஊர்வலம்; 9:30 மணிக்கு மூலமூர்த்தி அபிஷேகம்; பகல் 12:30 மணிக்கு மஹா மங்களாரத்தி.