நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது.
நெல்லிக்குப்பத்தில் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவில் உள்ளது. இங்கு அலர்மேல்மங்கை தாயார் சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலும் உள்ளது. இக்கோவிலில் ஒரே இடத்தில் நின்று சிவனையும், பெருமாளையும் தரிசிப்பது சிறப்பாகும். இக்கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழாவை முன்னிட்டு 108 சங்குகளில் புனிதநீர் நிரப்பி யாகம் செய்து சிவனுக்கும், பெருமாளுக்கும் சங்காபிஷேகம் நடந்தது. எந்த கோவிலிலும் இல்லாத வகையில் ஒரே சமயத்தில் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதருக்கும் அலர்மேல்மங்கை தாயார் சமேத பிரசன்ன வெங்கடாஜலபதிக்கும் திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஒரே சமயத்தில் திருக்கல்யாணம் நடப்பதை காண ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.