திருப்பரங்குன்றம்; விளாச்சேரி ஸ்ரீ சைதன்ய விட்டல் மந்திர் வேதகுருகுலத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா மூன்றாம் நாளான இன்று காலையில் உற்ஸவர், மூலவர்களுக்கு அபிஷேகம் முடிந்து திருக்கல்யாண அலங்காரமானது. பூஜை, பஜனைகள் முடிந்து மூலவர்கள் பாண்டுரங்கனுக்கு வெண்பட்டும், ருக்மணிக்கு குங்கும கலர் பட்டுப் புடவை சாத்துப்படி செய்யப்பட்டு திருமண சம்பிரதாயங்கள் முடிந்து திருக்கல்யாணம் நடந்தது. தீபாராதனைக்குப்பின்பு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.