ராமேஸ்வரம் அருகே மாட்டு சாணத்தில் விநாயகர் சிலை : பக்தர்கள் ஆர்வம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஆக 2025 12:08
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் மாட்டு சாணம், இயற்கை மூலப்பொருளில் விநாயகர் சிலை தயாராக உள்ளது. இதனை பக்தர்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். மண்டபம் சேர்ந்த சண்முகம்52, இவர் வீடு அருகே கொட்டகையில் மாடுகளை வளர்த்து பராமரித்து வருகிறார். ஆக., 27ல் விநாயகர் சதுர்த்தி யொட்டி சண்முகம் தனது வீட்டில் உள்ள மாடு சாணம், மரம் பிசின், கஸ்தூரி மஞ்சள் பவுடர், மாடு கோமியம் ஆகிய கலவையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளார். இயற்கை சார்ந்த மூலப் பொருள்களில் தயாரித்த விநாயகர் சிலைகள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாததால், சண்முகம் வீடு தேடி பக்தர்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். ஒரு சிலை ரூ.200 முதல் ரூ. 450 வரை விற்கப்படுகிறது.