சிறுமுகை பழத்தோட்டம் விநாயகர் கோயில் நீரில் மூழ்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஆக 2025 03:08
மேட்டுப்பாளையம்; சிறுமுகை பழத்தோட்டம் விநாயகர் கோயில் நீரில் மூழ்கியது.
கோவை மாவட்டம் சிறுமுகை அருகே பழத்தோட்டம் பகுதி உள்ளது. இங்கு மிகவும் பழமையான விநாயகர் கோயில் உள்ளது. இது பவானி ஆற்றில் கரையோரம் அமைந்துள்ள ஒரு பழமையான கோவில் ஆகும். கேரள மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பெய்து வரும் மழை காரணமாக, பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அந்த தண்ணீர் பவானி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்படுகிறது. இந்த தண்ணீர் அப்படியே பவானிசாகர் அணைக்கு செல்கிறது. இதனால் அணைப்பகுதியின் நீர்த்தேக்க பகுதிகள், பவானி ஆற்றின் கரையோர பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து வருகிறது. இதன் ஒருபகுதிகாக பழத்தோட்டம் விநாயகர் கோயில் நீரில் மூழ்கியது. இதனால் கோவிலுக்கு சென்று வழிபட முடியாமல் பக்தர்கள் தவித்து வருகின்றனர். குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீர் மெல்ல மெல்ல சூழ்ந்து வருகிறது.